கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட ராஜ வீதியில் உள்ள கால்வாயில் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் குவிந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் தூர் நாற்றம் வீசி வருவதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
இதனை குறிஞ்சிப்பாடி பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.