கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரசித்தி பெற்ற புத்துமாரியம்மன் கோவிலில் ஆடி நான்காம் வெள்ளிக்கிழமை செடல் திருவிழா நடைபெற உள்ளது.
இந்த நிலையில் இன்று பந்தல் மற்றும் கடைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாளை விநாயகர் பூஜை மற்றும் நாளை மறுநாள் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.