குமராட்சி: பெண் தூக்கிட்டு தற்கொலை

84பார்த்தது
குமராட்சி: பெண் தூக்கிட்டு தற்கொலை
கடலூர் மாவட்டம் குமராட்சி அருகே கூத்தூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்த குணசங்கர் சென்னையில் லாரி டிரை வராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி அருள்மொழி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் குணசங்கர் சென்னையில் இருந்து வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்த அருள்மொழி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் குமராட்சி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you