
கடலூர்: பெண்களுக்கு ரூ.50,000 நிதி உதவி
குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்குள் இருக்கும் படித்த ஏழை பெண்களின் திருமணத்திற்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவோருக்கு ரூ.25,000 முதல் ரூ.50,000 பணம் மற்றும் 8 கிராம் தங்கக்காசு ஆகியவை நிதிஉதவியாக வழங்கப்படும். கூடுதல் விபரங்களுக்கு உள்ளூர் இ-சேவை மையத்தை அணுகலாம்.