

செம்மண்டலம்: ஆஞ்சநேயர் கோவிலில் விளக்கேற்றி வழிபாடு
கடலூர் மாவட்டம் செம்மண்டலம் சிக்னல் அருகே அமைந்துள்ள ஸ்ரீ சாந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் தை மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு ஆஞ்சநேயர் சுவாமிக்கு இன்று (பிப்.1) சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முன்னதாக ஆஞ்சநேயருக்கு 40 அடி மாலை சாற்றி வழிபாடு நடைபெற்றது. இதனை தொடர்ந்து பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.