கடலூர்: கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர் காவல் துறையினர் நேற்று(அக்.28) ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கம்மியம்பேட்டை ஜெ. ஜெ. நகர் சிவன் கோயில் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அந்த வாலிபர் அதே பகுதியை சேர்ந்த ராமலிங்கம் மகன் சுர்ஜித் என தெரிந்தது. அவரிடமிருந்து 10 கிராம் கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இது குறித்து திருப்பாதிரிபுலியூர் காவல் துறையினர் சுர்ஜித் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.