கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS மேற்பார்வையில் கடலூர் மாவட்டம் காவல்துறை துப்பறியும் மோப்பநாய் படைப்பிரிவு சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கடலூர் மஞ்சக்குப்பம் புத்தக திருவிழாவில் விழிப்புணர்வு சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் துப்பறியும் மோப்ப நாய்கள் வணக்கம் செலுத்துதல், துப்பறியும் மோப்ப நாய்களின் அணிவகுப்பு மற்றும் பயிற்சியாளர்களின் கட்டளைக்கு கீழ்படிதல், மோப்பநாய் லியோவின் தனித்திறமையை மக்களுக்கு காண்பித்தல். மோப்பநாய் லியோ வண்ணப்பெட்டியில் மறைத்து வைத்துள்ள வெடிகுண்டை கண்டுபிடித்தல் போன்றவை இடம்பெற்றன.