ராஜ முத்தையா மருத்துவமனை எதிரில் மறியல் போராட்டம்

58பார்த்தது
ராஜ முத்தையா மருத்துவமனை எதிரில் மறியல் போராட்டம்
கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஒன்றியம் சாக்காங்குடி - அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ஆயிப்பேட்டை சாக்காங்குடி புளியங்குடி குச்சிப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து ஏழை எளிய 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் இன்று வழங்கிய மதிய உணவில் அரணை விழுந்து விஷத்தன்மையுடைய உணவை சாப்பிட்ட பின் மாணவர்கள் வாந்தி எடுத்து மயக்கமடைந்த நிலையில் சிதம்பரம் ராஜமுத்தையா மருத்துவக் கல்லூரி சிதம்பரம் அரசு மருத்துவமனை புவனகிரி மற்றும் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனை ஆகியவற்றில் 50 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தகவல் அளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சினர் தரமான சிகிச்சை அளித்திட வேண்டும் சார் ஆட்சியர் தலைமையில் விசாரணை குழு அமைத்து விசாரித்து பெற்றோர்களுக்கு முறையான தகவல் அளிக்காமல் காலதாமதப்படுத்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பள்ளியின் நிர்வாகம் சம்பந்தப்பட்ட ஊழியர்களின் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும் உணவு சமைக்கும் கூடத்தை புதுப்பித்திட வேண்டும். அதிகாரிகள் உரிய மருத்துவமனைகளில் வருகை தந்து ஆய்வு செய்திட வேண்டும்.
கடலூர் மாவட்டம் முழுவதும் பள்ளிகளில் சத்தான உணவு பராமரிக்கப்பட்டு சுகாதாரமாக வழங்கப்படுகிறதா என்பதை திடீர் ஆய்வு செய்து உறுதிப்படுத்திட வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெற்றது. பின்னர் ஆறுதல் கூறினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி