ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய தென்னிந்திய மாநிலங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடைபெறும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒவ்வொரு கிராமத்திலும் மது ஒழிப்பு மகளிர் குழு உருவாக்கப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார்.