2000 கைம்பெண்களுக்கு தையல் மிஷின் வழங்கிய அமைச்சர்

3557பார்த்தது
கழுதூர் வெங்கடேஸ்வரா கல்லூரியில் 2 ஆயிரம் கைம்பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம்
அமைச்சர் சிவெ. கணேசன் வழங்கினார்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி நகரில் இயங்கி வரும் என்எல்சி இந்திய லிமிடெட் நிறுவனத்தில் சி எஸ் ஆர் நிதியில் திட்டக்குடி தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் வசிக்கும் கணவனை இழந்த கைம்பெண்களுக்கு அமைச்சர் சிவெ, கணேசன் வேண்டுகோளின்படி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சார்பில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மோட்டார் பொருத்திய இலவச தையல் இயந்திரங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

கழுதூர் கிராமத்தில் உள்ள வெங்கடேஸ்வரா கல்லூரியில் நடைபெற்ற விழாவிற்கு என்எல்சி சேர்மன் பிரசன்ன குமார் தலைமை தாங்கினார். வெங்கடேஸ்வரா கல்லூரி நிர்வாகி சிவெக, வெங்கடேசன் வரவேற்றார். தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சிவெ. கணேசன் கலந்து கொண்டு 2 ஆயிரம் கைம்பெண்களுக்கு மின்சார மோட்டார் பொருத்திய இலவச தையல் இயந்திரங்களை வழங்கினார்.
இதனை பெற்றுக்கொண்ட பெண்கள் அமைச்சர் சிவெ. கணேசனை வாழ்த்தி நன்றி கூறி சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி