பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கக்கோரி, வேலூர் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக இன்று (மார்ச்.08) நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியால் தொடங்கப்பட்ட கையெழுத்து இயக்கம் தொடர்பாக வைக்கப்பட்ட பேனரில் 'WE STAND FOR WOMEN HARRASEMENT" என்று அச்சடிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. "WE STAND AGAINST WOMEN HARASSMENT" என்பதே பெண்கள் துன்புறுத்தலுக்கு எதிராக நாங்கள் நிற்கிறோம் என பொருள்படும்.