அரவிந்த் கெஜ்ரிவாலை கொல்ல சதி?

78பார்த்தது
அரவிந்த் கெஜ்ரிவாலை கொல்ல சதி?
பாஜகவும், துணை நிலை ஆளுநரும் சேர்ந்து சிறைக்குள் கெஜ்ரிவாலை கொல்ல சதி செய்வதாக ஆம்ஆத்மி எம்பி பகீர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் எம்பி சஞ்சய் சிங் அளித்த பேட்டியில், ‘கெஜ்ரிவாலின் உடல்நிலை குறித்து தவறான தகவல்களைத் தெரிவித்து குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். சிறையில் அவரை கொல்ல சதி நடக்கிறது. கெஜ்ரிவாலின் உடல்நிலை குறித்து ஆளுநர் மற்றும் பாஜக தவறான அறிக்கைகளை வெளியிடுவது, எங்களுக்கு சந்தேகத்தை உறுதிப்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி