மத்திய அரசின் புதிய சட்டத்திற்கு தடை விதிக்க காங்கிரஸ் மனு தாக்கல்

72பார்த்தது
மத்திய அரசின் புதிய சட்டத்திற்கு தடை விதிக்க காங்கிரஸ் மனு தாக்கல்
தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுப்பதற்கான மத்திய அரசின் புதிய சட்டத்தின் கீழ் தற்பொழுது காலியாக உள்ள தேர்தல் ஆணையர் இடங்களை நிரப்புவதற்கு மத்திய அரசுக்கு தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெயா தாகூர் மனு தாக்கல் செய்துள்ளார். பிரதமர், பிரதமர் நியமிக்கும் அமைச்சர், மக்களவை எதிர்கட்சி தலைவர் ஆகியோர் கொண்ட குழு தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுப்பர். இதில் அரசியல் பின்புலங்கள் உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருவதையொட்டி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி