'பரிதாபங்கள்' யூடியூப் சேனல் மீதான புகார் வாபஸ்

63பார்த்தது
'பரிதாபங்கள்' யூடியூப் சேனல் மீதான புகார் வாபஸ்
இந்துக்களின் உணர்வுகளை அவமதித்ததாக கூறி 'பரிதாபங்கள்' யூடியூப் சேனல் மீது ஆந்திர டிஜிபியிடம் தமிழக பாஜக சார்பில் அமர் பிரசாத் ரெட்டி புகார் அளித்தார். இந்நிலையில், 'லட்டு' வீடியோவுக்காக தமிழ்நாடு பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜாவிடம் கோபி மற்றும் சுதாகர் தொலைபேசி வாயிலாக மன்னிப்பு கேட்டனர். இதையடுத்து யூடியூப் சேனல் மீதான புகாரை திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாக பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி