இயந்திர மற்றும் பொறியியல் தொழில் கண்காட்சி இன்றுடன் நிறைவு

51பார்த்தது
கோவையில் சர்வதேச இயந்திர மற்றும் பொறியியல் தொழில் கண்காட்சி இன்றுடன் நிறைவு

கோவை மாவட்டம் கோவை பீளமேடு அடுத்துள்ள கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் ஜூன் 6-ம் தேதி முதல் 10ஆம் தேதி வரை இன்டெக் 2024 சார்பில் சர்வதேச இயந்திர மற்றும் பொறியியல் தொழிற்கண்காட்சி நடைபெற்றது.

இக்கண்காட்சியானது ஜூன் 6-ம் தேதி முதல் துவங்கி 10ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 அளவில் கொடிசியாவில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக டிவிஎஸ் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் நிர்வாக தலைவர் ஸ்ரீ தினேஷ், கௌரவ விருந்தினர் சி. ஐ. ஐ. சதரன் ரீஜன் தலைவர் டாக்டர். நந்தினி ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்தனர்.

இந்த மாபெரும் சர்வதேச இயந்திர மற்றும் பொறியியல் தொழில் கண்காட்சியில் உலகம் முழுவதிலிருந்து 495 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளது. மேலும் தொழிற்காட்சியில் தைவான், சீனா, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மற்றும் அமெரிக்கா, இந்திய மாநிலங்களான மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, பஞ்சாப், உத்தரபிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, ஒடிசா மற்றும் தமிழகம் முழுவதிலிருந்தும் 495 தொழில் நிறுவனங்கள் பங்கேற்றன. நிறைவு நாளான இன்று ஏராளமான பொதுமக்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் சார்ந்தவர்கள் இந்த கண்காட்சியை பங்கேற்று பயனடைந்தனர்.
Job Suitcase

Jobs near you