ஏ எஸ் குளம் பகுதியைச் சேர்ந்த ஆறு குட்டி என்ற 55 வயது முதியவர் கோட்டைபாளையம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அவரின் பின்னால் அதிவேகத்தில் வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் ஆறு குட்டிக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருக்கிறது.
இது குறித்து அக்கம் பக்கத்தினர் ஆனைமலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு ஆறு குட்டியை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற இருசக்கர வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.