விவசாயியை காரில் கடத்தி பணம், செல்போன், ஆவணங்கள் பறிப்பு

69பார்த்தது
விவசாயியை காரில் கடத்தி பணம், செல்போன், ஆவணங்கள் பறிப்பு
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அச்சையூரை சேர்ந்தவர் தாமோதரன்(31). விவசாயி. இவருக்கு தாராபுரம் பழனி ரோட்டில் 35 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை தாராபுரம் தாசம்பட்டியை சேர்ந்த கட்டுமான தொழில் செய்து வரும் ஹரிபிரசாத்(34) என்பவருக்கு ரூ. 2. 50 கோடிக்கு விற்பனை செய்வதற்கு பேசி முடிக்கப்பட்டது. முதற்கட்டமாக ஹரிபிரசாத் ரூ. 8. 25 லட்சத்தை கொடுத்தார். மீதமுள்ள பணம் தொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு இருந்து வந்தது. இந்தநிலையில், நிலம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஹரிபிரசாத் சம்பவத்தன்று கோவை வருமாறு அழைத்தார். இதனையடுத்து அவர் காரில் கோவை வஉசி பார்க் அருகே வந்தார். அப்போது அங்கிருந்த 2 வாலிபர்கள் அவரது காரில் அவரை மிரட்டி கடத்தி சென்றனர். பின்னர் தாமோதரனிடம் இருந்த ஏடிஎம் கார்டை பறித்து பாஸ்வேர்டு கேட்டு ரூ. 30 ஆயிரம் பணம் எடுத்தனர். தொடர்து அவரது செல்போன் மற்றும் நில ஆவணங்களை பறித்து கொண்டு தப்பினர். இது குறித்து தாமோதரன் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில் நிலம் தொடர்பான பிரச்னையில் ஹரிபிரசாத் தூண்டுதலின் பேரில் இந்த சம்பவம் நடைபெற்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் ஹரிபிரசாத், கணபதி சங்கனூரை சேர்ந்த பிரவீன்குமார்(37), சரவணம்பட்டி பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த பாபு(38) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி