காட்டு யானை தாக்கியதில் கோயில் பூசாரி, வன ஊழியர் படுகாயம்

71பார்த்தது
காட்டு யானை தாக்கியதில் கோயில் பூசாரி, வன ஊழியர் படுகாயம்
வனத்துக்குள் யானையை விரட்டும் பணி தீவிரம்
கோவை அருகே காட்டு யானை தாக்கியதில் கோயில் பூசாரி மற்றும் வன ஊழியர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த விராலியூரில் நேற்று இரவு நடந்த யானை தாக்குதலில் பெருமாள் கோவில் பூசாரி மற்றும் வனத்துறை ஊழியர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

வனப்பகுதியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பூசாரி மீது திடீரென யானை தாக்கியது. இதில் அவரது இரு கால்களிலும் காயம் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறை ஆல்பா டீம் ஊழியர் ஒருவரும் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்தார்.

இருவரையும் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேற்கு தொடர்ச்சி மலையை ஓட்டியுள்ள இந்தப் பகுதியில் யானைத் தொல்லை தொடர்ந்து இருந்து வருவதால், வனத்துறையினர் அவ்வப்போது கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும் பொதுமக்கள் வனப்பகுதிகளுக்குள் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும் என்றும் வனவிலங்குகள் நடமாட்டம் தொடர்பான எச்சரிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி