ரூ. 15 லட்சம் தங்கம் வாங்கி மோசடி; வாலிபர் கைது

54பார்த்தது
ரூ. 15 லட்சம் தங்கம் வாங்கி மோசடி; வாலிபர் கைது
கோவை வெறைட்டிஹால் ரோடு சலீவன் தெருவை சேர்ந்தவர் தீபங்கர் கஜீரா (31), நகைப்பட்டறை நடத்தி வருகிறார். இவர் தங்க கட்டிகளை வெளியே கொடுத்து நகை ஆபரணமாக செய்து விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில், இவர் கடந்த 2020ம் ஆண்டு கோவை தெலுங்கு வீதியை சேர்ந்த ரஞ்சித் ராய் (29) என்பவரிடம் 275 கிராம் தங்க கட்டிகளை கொடுத்து ஆபரணம் செய்து தரும்படி கொடுத்துள்ளார். இவற்றின் மதிப்பு ரூ. 15 லட்சம் ஆகும். ஆனால் ரஞ்சித் ராய் தங்கத்தை ஆபரணமாக செய்து கொடுக்கவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த தீபங்கர் கஜீரா, ரஞ்சித் ராயிடம் பல முறை கேட்டும் அவர் தங்கத்தை கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார். இதுகுறித்து தீபங்கர் கஜீரா நேற்று வெறைட்டிஹால் ரோடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித் ராயை கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த சுகாதேவ் மீதும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி