கோவை, மாநகராட்சி மேற்கு மண்டலம், வார்டு எண். 35க்குட்பட்ட இடையர்பாளையம், பகுதியி்ல், தடாகம் நெடுஞ்சாலைத்துறை சாலையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வாயிலாக மாநகராட்சி பகுதியிலுள்ள மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் பிரதான குடிநீர் குழாய் சேதமடைந்த பகுதியினை, மேயர் கல்பனா ஆனந்தகுமார் இன்று, நேரில் சென்று பார்வையிட்டு, அந்த பணிகளை, போர்க்கால அடிப்படையில் இரண்டு நாட்களுக்குள் சரிசெய்து சீரான குடிநீர் விநியோகம் செய்ய நெடுஞ்சாலைத்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் இந்த, நிகழ்ச்சி யில், மாமன்ற உறுப்பினர் சம்பத், செயற்பொறியாளர் சுந்தர்ராஜன், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, உதவி பொறியாளர் ராஜேஸ்வேணுகோபால் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.