2வது மனைவிக்கு வரதட்சணை கொடுமை: போலீஸ்காரர் மீது வழக்கு

80பார்த்தது
2வது மனைவிக்கு வரதட்சணை கொடுமை: போலீஸ்காரர் மீது வழக்கு
கோவை அருகேயுள்ள கோவைப்புதூர் 4வது பட்டாலியனில் போலீசாக பணியாற்றி வருபவர் தினேஷ்குமார் (29). இவருக்கும், போத்தனூர் பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணிற்கும் கடந்த 6 மாதத்துக்கு முன் திருமணம் நடந்தது.
இந்நிலையில், தினேஷ்குமார் ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம் செய்து அதை மறைத்து 2வது திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. திருமணத்தின் போது வரதட்சணையாக 60 பவுன் நகை வழங்கப்பட்டது. மேலும் 20 பவுன் நகை கேட்டு அவர் மனைவியை கொடுமை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக மனைவி கொடுத்த புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் தினேஷ்குமார் மீது பெண்கள் வன் கொடுமை சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தினேஷ்குமாரின் உறவினர் வசுமதி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி