டவுன்ஹால் பகுதியில் சாலையில் அருந்து விழுந்த மின் கம்பிகள்

65பார்த்தது
கோவை டவுன்ஹால் பகுதியில் திடீரென சாலையில் அருந்து விழுந்த மின் கம்பிகள்: உயிர் தப்பிய பொதுமக்கள் - போக்குவரத்தை நிறுத்தி பாதுகாப்பு வழங்கிய காவல்துறை
டவுன்ஹால் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து உக்கடம் பேருந்து நிலையம் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசலை போக்கும் விதமாக ஒரு வழி பாதையாக நீண்ட ஆண்டுகளாக உள்ளது.
அந்த சாலையில் உள்ள பழமை வாய்ந்த நாஸ் திரையரங்கம் அருகில் திடீரென மின் கம்பத்தில் இருந்த மின் கம்பிகள் அருந்து விழுந்தது சாலையில் நிறுத்தப்பட்டு இருந்த இரண்டு சக்கர வாகனத்தின் மீது உழுந்து உள்ளது.

உடனடியாக அக்கம், பக்கத்தில் இருந்த பொதுமக்கள் மற்றும் கடை ஊழியர்கள் சாலையை கடந்து செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தி உக்கடம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக அங்கு வந்த காவல் துறையினர் அப்பகுதியில் வாகனங்கள் கடந்து செல்லாமல் போக்குவரத்தை நிறுத்தி மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

திடீரென அறிந்து விழுந்த மின் கம்பியால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you