தமிழிசை சௌந்தரராஜன் கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, இன்றைய காலகட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி 2026-ஐ நோக்கி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் திராவிட மாடல் அரசு முற்றிலும் தோல்வி அடைந்த அரசு, தற்போது அவர்கள் மொழியை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். இங்கு எந்த அரசாங்கமும் சரியாக செயல்படவில்லை. பாலியல் பிரச்சனைகள், அரசு ஊழியர்கள் போராட்டம், அரசு மருத்துவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள். ஆனால் முதல்வர் மருத்துவமும், பள்ளிக்கல்வியும் என்னுடைய இரண்டு கண்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி போடவில்லை, அவர் அரசு மருத்துவமனையை விடுத்து தனியார் மருத்துவமனையில் தான் தடுப்பூசி போட்டுக் கொள்கிறார். அதேபோல முதலமைச்சர், அமைச்சர்களின் குழந்தைகள் பேரப்பிள்ளைகள் எங்கு படிக்கிறார்கள் என்று அனைவருக்குமே தெரியும். அதனால் திராவிட மாடல் அரசு இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருப்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. இதை நிச்சயம் நாங்கள் மக்களிடம் வெளிப்படுத்துவோம், இன்றைய காலகட்டத்தில் மக்களை நன்கு உணர்ந்திருக்கிறார்கள். இவர்களுக்கு முன்மொழி தேவை, நமக்கு இருமொழியா என்று மக்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்று கூறினார்.