கோவை வடவள்ளி பட்டியம்மன் நகரை சேர்ந்தவர் முத்துக்குமார்(36). இவரது மனைவி நந்தினி(36). குடிப்பழக்கம் உடைய முத்துக்குமார் நேற்று முன்தினம் தனது அறைக்கு சென்றார். நீண்ட நேரமாக அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த நந்தினி அங்கு சென்று பார்த்தபோது முத்துக்குமார் மின்விசிறியில் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நந்தினி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் முத்துக்குமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் முத்துக்குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் குடும்ப பிரச்னையில் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரித்து வருகின்றனர்.