கோவையில் தமிழ்நாடு-2 தேசிய மாணவர் படை (என். சி. சி. ) சார்பில் 'ஏ' சான்றிதழ் தேர்வு நேற்று (பிப்.2) கோவை st. மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. கோவை, திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 19 பள்ளிகளில் 9 மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் 370க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதினர். காலை 11: 00 மணி முதல் மதியம் 1 மணி வரை எழுத்து தேர்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி மேல் அணி நடை பயிற்சி, துப்பாக்கியின் பாகங்களை கண்டறிதல், கையாளுதல், ராணுவம் தொடர்பாக குறியீட்டு படங்களை பார்த்து இடத்தை கூறுதல் போன்ற செய்முறை தேர்வு நடைபெற்றது. லெப்டினன்ட் கர்னல் மேற்பார்வையில் இந்த தேர்வு நடைபெற்றது. இத்தேர்வு கொங்கு மண்டல அளவில் நடைபெறும் தேர்வு என்பது குறிப்பிடத்தக்கது.