கோவை, ராம்நகரில் உள்ள சபர்பன் மேல் நிலைப் பள்ளியில் 1975 - ம் ஆண்டு எஸ். எஸ். எல். சி படித்த மாணவர்கள் 50 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் 120 - க்கு மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் சந்தித்துக் கொண்டனர். தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் முன்னாள் மாணவர்கள் இந்த நிகழ்ழ்சியில் கலந்து கொண்டனர். மேலும் கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து இதற்கான திட்டத்தை ஏற்படுத்தி அனைவரும் ஒன்று கூடியது மிக மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர்.
அது மட்டுமில்லாமல் 1975 - ம் ஆண்டு இவர்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்களை எட்டு பேரை இந்த நிகழ்ச்சிக்கு வரவழைத்து அவர்களுக்கு தலா 30 ஆயிரம் ரூபாயும் நிதி வழங்கினார்கள். மேலும் மீதமுள்ள நான்கு ஆசிரியர்கள் வர முடியாத காரணத்தினால் அவர்களை நேரடியாக வீட்டிற்கு சென்று நிதி வழங்க இருப்பதாகவும், முன்னாள் மாணவர்கள் சார்பாக சபர்பன் பள்ளிக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கி உள்ளனர்.
அதனைத் தொடர்ந்து இவர்கள் இந்த பள்ளியில் படித்த காலத்தில் நடைபெற்ற சம்பவத்தை அனைத்தையும் ஒன்று சேர்ந்து புத்தகமாக வெளியிட்டனர்.