கோவையில் வரும் நான்கு நாட்கள் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இன்றும் (செப்.,15) நாளையும் (செப்.,16) தூரல் மழை எதிர்பார்க்கப்படுவதாக தமிழ்நாடு வேளாண் பல்கலை காலைநிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.
பகல் நேர வெப்பநிலை, 31-32 டிகிரி செல்சியஸ் ஆகவும், இரவு நேர வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும். துாறல் மழை எதிர்பார்க்கப்படுவதால், மண் ஈரத்தினை பொறுத்து நீர் பாசனத்தை தொடர அறிவுறுத்தப்பட்டுள்ளது. வறண்ட வானிலையை பயன்படுத்தி, முதிர்ந்த நிலக்கடலை மற்றும் சிறுகுறு தானியப்பயிர்களை அறுவடை செய்து உலரவைத்து சேமிக்கவேண்டும்.
அதிவேக காற்று எதிர்பார்க்கப்படுவதால், வாழை மற்றும் கரும்பில் உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும். மரவள்ளி கிழங்கு நடவு செய்வதற்கு இதுவே உகந்த தருணமாகும். நடவு செய்யும் மரவள்ளி கிழங்கின் கரணைகள் 15 செ. மீ. , நீளமும், 8-10 கணுக்கள் உள்ளதாகவும், தண்டின் நடுப்பகுதியில் வெட்டப்பட்டவையாகவும் இருக்கவேண்டும்.
தற்போதைய வெப்ப மான வறண்ட மற்றும் அதிவேக காற்றின் காரணமாக, கால்நடைகளுக்கு சுத்தமான குளிர்ந்த குடிநீர் அளிக்கவேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.