கோவை மேற்கு ரோட்டரி கிளப் சார்பில் அறிவியல் கண்காட்சி

74பார்த்தது
கோயம்புத்தூர் மேற்கு ரோட்டரி சங்கம், புதிய கண்டுபிடிப்புகளின் அவசியம் குறித்து இளம் மாணவர்களிடையே கண்டுபிடிப்பு போட்டியை நடத்துகிறது. குறிப்பாக, 12 வயது முதல் 17 வயது வரை உள்ள மாணவர்கள், உலகில் உள்ள தற்போதைய பிரச்னைகளை படைப்பாற்றல் மூலம் தீர்வுகளை தர இது வாய்ப்பாக அமைகிறது.

புதுமை கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தி வரும் ஐ எக்ஸ்ப்ளோரர் பவுண்டேஷன், மெட்டாசாஜ் போன்ற கௌரவிமிக்க நிறுவனங்களுடன் இணைந்து போட்டி நடத்தப்படுகிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நடகா, உத்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 54 பள்ளி மாணவர்கள், இந்த போட்டிக்கான புதிய கண்டுபிடிப்புகளை சமர்ப்பித்துள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு 166 திட்டங்கள் வரப்பெற்றுள்ளன.

"பிக்பாங்க் 24" என பெயரிடப்பட்ட இந்த மாபெரும் ரோட்டரி புதுமை கண்டுபிடிப்பில், 3 மாநிலங்களை சேர்ந்த 35 பள்ளிகள் பங்கேற்று, 92 திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. 21-ம் நூற்றாண்டின் அரிய கண்டுபிடிப்புகளை மேம்படுத்தி, அதற்கான மனநிலையை மாணவர்களிடையே உருவாக்க உதவுவது தான் இந்த முயற்சியின் முக்கிய நோக்கம். கோவையில் நடக்கும் நிகழ்வில், கோவை மேற்கு ரோட்டரி கிளப், வெற்றியாளர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்குகிறது. இந்த திட்டங்கள், "ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சிக்கான இலக்கு" என்ற கருத்தில் நடத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்தி