உச்சத்தை தொடும் காய்கறி விலை ஏற்றதால் பொதுமக்கள் அவதி

57பார்த்தது
உச்சத்தை தொடும் காய்கறி விலை ஏற்றதால் பொதுமக்கள் அவதி
-சமூக ஆர்வலர் விகாஸ் மனோட் பேட்டி

விலங்குகள் நலன் மற்றும் விலங்குகள் நலன் பாதுகாப்பு தேசிய தலைவர் விகாஸ் மனோட் கோவையில் மரம் நடும் நிகழ்ச்சி, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, கால்நடை விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு கோடை காலத்தில் தண்ணீர் வைத்து பராமரித்தல், சாலையோர மனிதர்களுக்கு உணவுகள் வழங்குதல், இறந்த யானைகளுக்கு யாக பூஜை மற்றும் மரக்கன்றுகளை நடுதல் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளையும் வழங்கியும் பல்வேறு சமூக சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறார். இந்நிலையில், தற்போது தமிழகத்தின் பல பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக காய்கறி வரத்து வெகுவாகக் குறைந்து உள்ளது. அதையடுத்து காய்கறிகளின் விலை உச்சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, தக்காளி விலை கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து, விலங்குகள் நலன் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு தேசிய தலைவர் விகாஸ் மனோட் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் தற்போது காய்கறிகளின் விலைகள் உச்சத்தை அடைந்துள்ளது. கடந்த மாதம் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் பொதுமக்களுக்கு பொருளாதார பாதிப்பில் இருந்து வருகின்றன. இந்நிலையில், காய்கறி விலை உச்சத்தை எட்டியதால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்த வருகின்றனர் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி