கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

573பார்த்தது
கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சார்பில், அரசூர் கே. பி. ஆர். கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற சைபர் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி சூலூரில் நடைபெற்றது. சூலூர் புதிய பேருந்து நிலையம் அருகே இருந்து தொடங்கிய இந்த பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் தலைமை தாங்கி கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். கோவை சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், இன்ஸ்பெக்டர் பிரவீனா, சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். பேரணியில் 1, 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு சைபர் கிரைம் குற்றத்திற்கு எதிரான விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.

மேலும் பணத்தை இழந்து விட்டவர்கள் 1930 என்ற எண்ணுக்கு 'அழைக்கவும், புகார் தெரிவிக்க www. cybercrime. gov. in. என்கிற இணையதள முகவரியையும் பொதுமக்களுக்கு தெரிவித்து பேரணியாக வந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி