கோவை: Source Of Wisdom பவுண்டேஷன் மகளிர் தின விழா!

71பார்த்தது
கோவை மாவட்டம் கணியூர், ஷீபா நகர் சமுதாயக் கூடத்தில் நேற்று Source Of Wisdom பவுண்டேஷன் மற்றும் உறவுகள் அறக்கட்டளை சார்பாக சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. கோவை மாவட்டம் குழந்தைகள் உதவி மைய ஒருங்கிணைப்பாளர் திருமதி. ஆஞ்சலினா ஜோசப் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மகளிரின் உரிமைகள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றி சிறப்புரையாற்றினார்.
மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் தற்காப்பு கலைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பல்வேறு துறையை சார்ந்தவர்களுக்கும் Source Of Wisdom சார்பாக சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு விருது மற்றும் சிறந்த ஆசிரியர்களுக்கான விருதும் வழங்கப்பட்டது.
Source Of Wisdom நிறுவனர் திரு. வினோத்குமார் மற்றும் இயக்குனர் திரு. பாலமுருகன் அவர்கள் மூலமாக வந்திருந்த அனைத்து மகளிருக்கும் பரிசுகள் வழங்கி கௌரவித்தனர்.
இந்நிகழ்வில் Source Of Wisdom பவுண்டேஷன் மற்றும் உறவுகள் அறக்கட்டளையின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி