அலையன்ஸ் கிளப் சார்பில் 13 மருத்துவர்களுக்கு விருது

81பார்த்தது
கோவைப்புதூர் பகுதியில் உள்ள வி. எஸ். பி ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அலையன்ஸ் கிளப்ஸ் இன்டர்நேஷனல் டிஸ்ட்ரிக்ட் 250எஸ் மற்றும் வி. எஸ். பி ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளம் இந்தியர்கள் (YI) அமைப்பு, உடன் இணைந்து தேசிய மருத்துவர் தினத்தை இன்று காலை கொண்டாடியது. இந்த நிகழ்விற்கு அலையன்ஸ் மாவட்டத் தலைவர் எஸ் பிரபாகரன் வரவேற்புரை வழங்கினார். அலையன்ஸ் கிளப் மாவட்ட ஆளுநர் ராஜன் தலைமையுரை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிக்கு, கோவை மாநகராட்சி ஆணையர் எம். சிவகுரு பிரபாகரன் ஐஏஎஸ், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

விழாவில், கோவை மருத்துவக் கல்லூரி டீன் மருத்துவர் ஏ. நிர்மலா அவரது சாதனைகளையும் பாராட்டி அவருக்கு விருது வழங்கப்பட்டது.

அவரைத் தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள் ப்ரீத்தா, சிந்து, கலைவாணி, உமா பிரியதர்ஷனி, கார்தியாயினி, அனிதா, காந்திகேயன் மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் செந்தில்குமார், கஜீவினோ அறம், விஸ்வரூப், பிரவீன் ராஜ், சுரேந்திரன், சுனை என். பாட் ஆகிய 13 மருத்துவர்களுக்கு அவர்களது சேவையைப் பாராட்டி விருது வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி