கையும் களவுமாக பிடிபட்ட கொள்ளையன்

70பார்த்தது
கையும் களவுமாக பிடிபட்ட கொள்ளையன்
கோவை காட்டூர் ராம்நகர் நேரு தெருவை சேர்ந்தவர் ராஜன்(53). இவரது மனைவி கதிர்நாய க்கன்பாளையத்தில் வசித்து வருகிறார். ராஜன் சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டி விட்டு, கதிர்நாயக்கன் பாளையத்தில் உள்ள தனது மனைவியை பார்ப்பதற்காக சென்று விட்டார். இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் வீட்டின் கதவின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க சென்றுள்ளார் அப்போது எதிர்பாராத விதமாக கால்தவறி கீழே விழுந்து விட்டார். ஏற்கனவே மது குடித்து விட்டு, வந்ததால் போதை தலைக்கேறிய அவர், கீழே விழுந்ததும், நாம் எதற்காக வந்தோம் என்பதை மறந்து அப்படியே அங்கேயே அசந்து தூங்கி விட்டார். இந்நிலையில் வெளியில் சென்றிருந்த ராஜன், சில மணி நேரங்களில் வீட்டிற்கு திரும்பி வந்தார், தனது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக தனது நண்பரை துணைக்கு அழைத்துக் கொண்டு பூட்டிய வீட்டை உடைத்து உள்ளே நுழைந்தது பார்த்தபோது வீட்டில் உள்ள தரையில் ஒருவர் தூங்கிய நிலையில் கிடந்தார். இதுகுறித்து ராஜன் காட்டூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சப்-இன்ஸ்பெக்டர்கள் பழனிச்சாமி, பெருமாள்சாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டிற்குள் தூங்கி கொண்டிருந்த மர்மநபரிடம் விசாரித்ததில் அவர் கருமத்தம்பட்டி பழைய பாளையத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பாலசுப்பிரமணியனை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி