அமெரிக்கா சென்றவர் வீட்டில் ரூ. 1 லட்சம் கொள்ளை

70பார்த்தது
அமெரிக்கா சென்றவர் வீட்டில் ரூ. 1 லட்சம் கொள்ளை
கோவை சிங்காநல்லூர் திருச்சி ரோட்டில் உள்ள அப்பார்ட்மென்டை சேர்ந்தவர் கார்மெல் வேணுகோபால்(60). இவர் கடந்த ஏப்ரல் மாதம் வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் அமெரிக்காவில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றார். இந்நிலையில், நேற்று அவரது வீட்டு கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனைப்பார்த்த பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவர் கார்மெல் வேணுகோபாலுக்கு போன் செய்து சொன்னார். உடனே கார்மெல் வேணுகோபால், நண்பரான கோவை இருகூரை சேர்ந்த நந்தகோபால்(43) என்பவரிடம் விவரத்தை கூறி வீட்டுக்கு சென்று பார்க்குமாறு தெரிவித்தார். அவர் சென்று பார்த்தபோது, வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர் அங்கிருந்த ரூ. 1 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து நந்தகோபால் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் வீட்டுக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு பதிவாகியிருந்த 1 கைரேகை பதிவை கைப்பற்றினர். அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி