அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொண்டார்.

1059பார்த்தது
கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இந்தியா கூட்டணியின் கோவை பாராளுமன்ற திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொண்டார்.

அங்கு ஏராளமான திமுகவினர், பொதுமக்கள் குவிந்து இருந்தனர். அப்போது அவர்களை பார்த்து உதயநிதி ஸ்டாலின் எல்லோரும் நல்லா இருக்கீங்களா? என கேட்டு பேசியதாவது:

38 தொகுதிகளில் பிரசாரம் முடித்துவிட்டு இன்றைக்கு 39-வது தொகுதியாக நமது வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு ஆதரவு கேட்டு இங்கு வந்துள்ளேன். இந்த தேர்தலில் தமிழகம், புதுவை சேர்த்து 40-க்கு 40 இந்தியா கூட்டணி வெற்றி பெறும். வாக்குபதிவிற்கு இன்னும் 2 நாட்கள் தான் உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் போடும் ஓட்டு என்பது மோடிக்கு வைக்கும் வேட்டு. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இங்கு வந்தேன். நமது வேட்பாளரை 2 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்தீர்கள். கோவை பாராளுமன்ற தொகுதியில் 10 வருடம் கழித்து திமுக போட்டியிடுகிறது

தொடர்புடைய செய்தி