55 வது வார்டில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

70பார்த்தது
கோவையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட மக்களுடன் முதல்வர் திட்டத்தின் தொடர்ச்சியாக, நேற்று கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்-55க்குடபட்ட பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி நடைபெற்றது. 55வது வார்டு மதிமுக மாமன்ற உறுப்பினர் அன்பு என்கிற தர்மராஜ், மற்றும் உதவி ஆணையாளர் பார்த்திபன் ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி அனைத்து தரப்பு பொதுமக்களிடம் இருந்து மனுக்களைபெற்றுக் கொண்டு முகாமில் தூக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் 55வது வார்டு பகுதி பொருளாளர் மதிமுக ராஜு, மதிமுக வட்டச் செயலாளர் மனோஜ் குமார், மதிமுக மோகன் , கிழக்கு மண்டலம் SO பரமசிவம், சுகாதார ஆய்வாளர் முருகேசன், திமுக பகுதி துணைச் செயலாளர் கஸ்தூரி அருண், சௌந்தர்ராஜன் , வட்டச் செயலாளர் ராஜேந்திரன் , தம்பு வேலுமணி , மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி