குடிபோதையில் போலீசாரிடம் தகராறு ; லாரி டிரைவர் கைது

85பார்த்தது
குடிபோதையில் போலீசாரிடம் தகராறு ; லாரி டிரைவர் கைது
கோவை உக்கடம் போலீசார் சுங்கம் பைபாஸ் சாலை மின் வாரிய அலுவலகம் அருகில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். வாகனங்களில் வருபவர்களை நிறுத்தி அவர்களது ஆவணங்களை சரிபார்த்தனர்.  
அப்போது உக்கடம் ஜி. எம் நகரை சேர்ந்த முகமது நஸ்ருதீன் (24) என்பவரை போலீசார் சோதனை செய்தபோது அவர் மது அருந்தி இருந்ததாக தெரிகிறது. அதை தொடர்ந்து அவர் மீது போலீசார் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்தனர். இது குறித்து முகமது நஸ்ருதீன் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தேவகுமாரிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டார். தேவகுமார் உக்கடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் தண்ணீர் லாரி டிரைவர் முகமது நஸ்ருதீன் மீது போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி