பொது இடத்தில் குப்பை கொட்டியவருக்கு 2000 ரூபாய் அபராதம்!

77பார்த்தது
பொது இடத்தில் குப்பை கொட்டியவருக்கு 2000 ரூபாய் அபராதம்!
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பொது இடங்களில் குப்பைகளை கொட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டு, வீடு வீடாக சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தனித்தனியாக பிரித்து சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நஞ்சுண்டாபுரம் சாலை ஓரத்தில் ஒருவர் காரில் வந்து குப்பை கொட்டுவதாக சுகாதாரத்துறை ஆய்வாளர் ஜெகநாதனுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அவர் சம்பவ இடத்திற்கு (செப் 7 )நேற்று விரைந்து சென்று, அங்கு குப்பையை கொட்டிய நபரை கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் நேதாஜி நகரைச் சேர்ந்த அன்பு என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு ரூபாய் 2, 000 அபராதம் விதிக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி