கோவை சரவணம்பட்டி சத்தி ரோட்டை சேர்ந்தவர் புனிதாவதி(57). வீட்டு வேலைக்கு சென்று வருகிறார். நேற்று வேலை முடிந்து அவர் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். ஜிகேஎஸ் ரோட்டில் சென்ற போது அவரை பைக்கில் பின் தொடர்ந்து வந்த 2 பேர் அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த புனிதாவதி இது குறித்து சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்து தப்பிய பைக் ஆசாமிகளை தேடி வருகின்றனர்.