உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா

72பார்த்தது
கோவை ராம் நகர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது. விலங்குகள் நலன் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு தேசிய தலைவர் விகாஸ் மனோட் கோவையில் மரம் நடும் நிகழ்ச்சி, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, கால்நடை விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு கோடை காலத்தில் தண்ணீர் வைத்து பராமரித்தல், சாலையோர மனிதர்களுக்கு உணவுகள் வழங்குதல், இறந்த யானைகளுக்கு யாக பூஜை மற்றும்
மரக்கன்றுகளை நடுதல் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளையும் வழங்கியும் பல்வேறு சமூக சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறார். இந்நிலையில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவை கோவை ராம்நகர் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இன்று மாலை மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

இது குறித்து அவர் பேசுகையில், ஒவ்வொரு ஆண்டும் உலக சுற்றுவது சூழல் தினம் ஜூன் 5ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு ஜூன் பத்தாம் தேதி இன்று தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் வகையில் விழிப்புணர்வு பிரசுரம் மற்றும் இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. மாணவர்கள் வருங்காலத்தில் இது போன்ற செயல்களில் தன்னை ஈடுபடுத்தி சமுதாயத்திற்கு பல்வேறு சமூக சேவைகளை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி