பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்

82பார்த்தது
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்
பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா, இருப்பிட மருத்துவ அலுவலர் டாக்டர் மாரிமுத்து, செவிலியர் கண்காணிப்பாளர் தனலட்சுமி, நோய் தடுப்புத்துறை மருத்துவர் டாக்டர் சிந்துஜா, செவிலியர் லாவண்யா ஆகியோர் இணைந்து இந்த நேற்று (செப்.,19) அறிவிப்பை வெளியிட்டனர்.

அதில் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். தற்போது பரவி வரும் மாறுபட்ட கொரோனா, சிக்குன்குனியா, டெங்கு காய்ச்சல், குரங்கு அம்மை, நிப்பா வைரஸ் போன்ற நோய்களைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கை சுகாதாரத்தின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.

அடிக்கடி சோப்பு கொண்டு கை கழுவுதல் மற்றும் கிருமி நாசினி பயன்படுத்துதல் ஆகியவற்றின் அவசியம் எடுத்துரைக்கப்பட்டது. செப்டம்பர் 17 முதல் நோயாளிகள் பாதுகாப்பு வாரம் கொண்டாடப்படுவதாகவும், அதன் முதல் நாளில் உரிய உறுதிமொழி எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி