பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட கோவை அரசு பொருட்காட்சி

69பார்த்தது
கோவையின் மிகவும் பிரசித்தி பெற்ற அரசு பொருட்காட்சி பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக கோவை வ. உ. சி பூங்கா மைதானத்தில் துவங்கப்பட்டது. இதனை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி துவக்கி வைத்தார்.

இங்கு கோவை மாநகர காவல் துறை, இந்து அறநிலைத்துறை, மின்சார துறை, போக்குவரத்து துறை, பொது சுகாதாரத்துறை, வேளாண்மை துறை என தமிழக அரசின் அனைத்து துறைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன மேலும் மாணவர்களுக்கான கல்வி மற்றும் அறிவியல் சார்ந்த அரங்கம், தனியார் அரங்கங்கள் உள்ளன.

மேலும், சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவரும் வகையில் விளையாட்டு அரங்கங்கள், உணவு பண்டங்கள், விற்பனையகங்கள் என அனைத்து அம்சங்களும் கொண்டுள்ளது.

குறிப்பாக 3டி ஷோ வேர்ல்ட் பேய் வீடு மற்றும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விளையாடி மகிழ பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் கோவை அரசு பொருட்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

இக்கண்காட்சி, மாலை 4 மணி முதல் இரவு 10 மணிவரை, பெரியவர்களுக்கு ரூபாய். 15, சிறியவர்களுக்கு ரூ. 10 மற்றும் பள்ளி மாணவ மாணவியருக்கு ரூ. 5 மட்டும் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி