திமுகவில் இணைந்த கல்லூரி மாணவர்கள்

51பார்த்தது
திமுகவில் இணைந்த கல்லூரி மாணவர்கள்
கோவை வடக்கு மாவட்ட மாணவர் அணி திமுக சார்பில் என். ஜி. பி கல்லூரி, கிருஷ்ணா கல்லூரி, கற்பகம் கல்லூரி, கே. பி. ஆர் கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொ. அ. ரவி தலைமையில், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் செ. அந்தோணிராஜ் முன்னிலையில், இன்று தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட மாநில மாணவர் அணி இணைச் செயலாளர் பூவை சி. ஜெரால்டு, மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் வி. ஜி. கோகுல் ஆகியோர் கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரிகளில் மாணவர் மன்றம் உருவாக்குவது பற்றியும், எப்படி கல்லூரிகளில் செயல்பட வேண்டும் என்பது பற்றியும்
பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தனர். இறுதியில் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ஞா. சிவகுமார் நன்றி உரையாற்றினார்.

டேக்ஸ் :