கோவை: மாற்றுத்திறனாளி சிறப்பு குழந்தைகளுக்கான பூங்கா திறப்பு

52பார்த்தது
தமிழகத்திலேயே முதன்முறையாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறப்புத் திறன் கொண்ட குழந்தைகளுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பூங்கா கோவையில் நேற்று திறக்கப்பட்டது. கோவை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்புகளின் கூட்டு முயற்சியால் காளப்பட்டி அருகே நேத்ரா நகர் பகுதியில் இந்த நம்ம சிறப்பு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் பவன்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் இணைந்து இந்த பூங்காவை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தனர். திறப்பு விழாவின்போது, அவர்கள் சிறப்புத் திறன் கொண்ட குழந்தைகளுடன் கலந்துரையாடி விளையாடி மகிழ்ந்தனர். கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ அமைப்புகளின் இந்த மனிதாபிமான முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி