கோவை செல்வபுரம் போலீசார் நேற்று ரோந்து பணி சென்றனர். அப்போது கல்லாபுரம் தெற்கு ஹவுசிங் யூனிட் அருகே சந்தேகம்படும் படி நின்றிருந்த ஒரு பெண்ணை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். சோதனை செய்தபோது, அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட செல்வபுரம் தெற்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த சாகுல் ஹமீத் மனைவி பர்ஹத் நிஷா(49) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா, ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய பர்ஹத் நிஷா மகன் அப்துல் கலாம்(25) என்பவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.