போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு ஆர்ப்பாட்டம்

54பார்த்தது
தமிழக அரசை கண்டித்து போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்ப்பில் ஆர்ப்பாட்டம்*

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பாக கோவை சாய்பாபா காலனி அருகே மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அலுவலகம் முன்பு தமிழக அரசை கண்டித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தமிழக அரசு ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் பஞ்சப்படியை நீதிமன்ற உத்தரவுப்படி வழங்க வேண்டும், அரசு ஊழியர்களைப் போல் மருத்துவ காப்பீடு திட்டம் உருவாக்க வேண்டும், 2013 ஒப்பந்த உயர்வு 40% மீதி தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

பணியின் போது இறந்த தொழிலாளர்களின் குடும்ப நல நிதியை உடனடியாக வழங்க வேண்டும், 2016 ஒப்பந்தப்படி ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் STERBS உடனடியாக வழங்க வேண்டும்.

பண்ணின் போது ஒப்படைப்பு செய்த ஈட்டிய விடுப்புக்கான தொகையை வழக்கு தொடுத்ததன் பெற வேண்டும் என்ற நிலைமை மாற்ற வேண்டும், பணியின் போது இறந்த தொழிலாளர்களின் குடும்ப வாரிசுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி