கோவை கணபதி மாநகரை சேர்ந்தவர் விக்டர்(33). தனியார் வங்கி மேலாளர். தினமும் இவரும், இவரது மனைவியும் காலை வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம். அப்போது அவர்கள் கதவை பூட்டி விட்டு அங்குள்ள ஷூ ரேக்கில் சாவியை வைப்பதை வாடிக்கையாக வைத்திருந்தனர். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் சம்பவத்தன்று சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே நுழைந்தார்.
பின்னர் பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகையை திருடி சென்று விட்டார். நகை திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்த விக்டர் இது குறித்து சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடனை தேடி வருகின்றனர்.