வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள்

68பார்த்தது
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள்
கோவை

கோவை மாவட்ட சுன்னத் ஜமாஅத் கொள்கை கூட்டமைப்பு சார்பில் தென் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டது.

தூத்துக்குடி, நெல்லை, உள்ளிட்ட தென் தென் மாவட்டங்களில் கடந்த 17, 18ஆம் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் கடும் சேதம் அடைந்தன. வெள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணிகளில் தனியார் அமைப்புகள் , அரசு பணியாளர்கள் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கோவை மாவட்ட சுன்னத் ஜமாஅத் கொள்கை கூட்டமைப்பு சார்பில் போர்வை, பாய், சோப்பு, எண்ணெய், அரசி உள்ளிட்ட சமையலுக்கு தேவையான நிவாரண பொருட்கள் கொண்டு இன்று செல்லப்பட்டது. சுமார் 700க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தேவையான பொருட்களை கோவையிலிருந்து தென் மாவட்டத்திற்கு நேரடியாக சென்று பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி