மாநகராட்சி மற்றும் ஸ்மார்ட் சிட்டி சார்பில் லேசர் ஷோ

1088பார்த்தது
கோவை

புத்தாண்டு வரவேற்க மாநகராட்சி மற்றும் ஸ்மார்ட் சிட்டி சார்பில் லேசர் ஷோ நடைபெற்றது - பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டுகளித்து மகிழ்ச்சி அடைந்தனர்.

கோவை உக்கடம் பகுதியில் அமைந்துள்ள வாலங்குளம் ஸ்மார்ட் சிட்டி பகுதியில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் குளத்தைச் சுற்றிலும் புத்தாண்டை நள்ளிரவு 12 மணி வரைக்கும் வரவேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி சார்பில் இரவு 12 மணி வரை லேசர் கண்களை பறிக்கும் வண்ண வண்ண விளக்குகளால் ஒளிரூட்டபட்டது. இதில் புத்தாண்டு பிறந்தவுடன் சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக 250 டிரோன் கேமராக்கள் பறக்கவிடபட்டு ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கபட்டது. இந்நிகழ்ச்சியினை பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து கண்டுகளித்தனர். வாலாங்குளத்தில் பாலத்தின் மீது பட்டாசுகள் வரிசையாக வெடிக்க வைத்து காண்போரை வியக்கும் அளவில் பட்டாசுகள் வான வேடிக்கை இருந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
மேலும் இளைஞர்கள் மற்றும் பெண்கள் என பல ஆயிரம் கணக்கான மக்கள் கண்டுகளித்ததுடன் புத்தாண்டு வாழ்த்துக்களை பறிமாறிக்கொண்டனர். குழுக்களாக வந்த பொதுமக்கள் கேக் வெட்டி மற்றும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி