தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் மாநகராட்சி குனியமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாட புத்தகங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி , வழங்கினார். உடன் மேயர் திருமதி. கல்பனா ஆனந்தகுமார் , மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன் துணை மேயர். ரா. வெற்றிசெல்வன், உதவி ஆணையர் (பொ). இளங்கோவன், ஆளுங்கட்சித்தலைவர் கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள். பாபு, அகமது கபீர்,. இளஞ்சேகரன், அஸ்லாம் பாஷா மற்றும் டேவிட்ராஜா , பள்ளி தலைமையாசிரியர் உள்ளபட பலர் உள்ளனர்.